நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் கோயம்புத்தூர்- திருச்சி நெடுஞ்சாலை மிகவும் போக்குவரத்து அதிகமான சாலையாகும், வெள்ளகோவில் தொழில்கள் நிறைந்த நகராட்சி அந்தஸ்தில் உள்ள நகரமாகும். கோயம்புத்தூர் - திருச்சி நெடுஞ்சாலையின் நடுவே (டிவைடர்) தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளகோவில் நகர் பகுதியில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் சாலையோரம் நிற்கும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் தன்னார்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.