வாக்குச்சாவடி கட்டிட அளவீடு பணி

வாக்குச்சாவடி கட்டிட அளவீடு பணி;

Update: 2021-07-30 14:33 GMT
வெள்ளகோவில்
வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. 2021 சட்டப்பேரவை தேர்தல் வாக்காளர் பட்டியல்படி, ஆண் வாக்காளர்கள் 17 ஆயிரத்து 823, பெண் வாக்காளர்கள் 19 ஆயிரத்து 72, இதர வாக்காளர்கள் 3 ஆக மொத்தம் 36 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர். 
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி பகுதியில் உள்ள 19 பள்ளிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. 21-வார்டுகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி அமைய உள்ள கட்டிடங்களின் அளவீடு பணியை நேற்று நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்