சீர்காழி பஸ்நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்; பஸ் கண்ணாடி உடைப்பு - வாலிபர் கைது
சீர்காழி பஸ்நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரை தாக்கி, பஸ் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-
சீர்காழி,
சீர்காழி அருகே கோவில்பத்து தென்னங்குடி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 55). இவர் அரசு போக்குவரத்து கழகம் சீர்காழி கிளையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு புதிய பஸ் நிலையத்தில் பணியில் ஈடுபட்டு இருந்த மோகனிடம், சீர்காழி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நாயக்கர் என்கிற வெண்மணி (35) என்பவர் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
அப்போது திடீரென வெண்மணி, மோகனை தாக்கியதோடு அங்கு நின்றிருந்த பூம்புகார் நகர அரசு பஸ் பின்புற கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்தார்.
இது குறித்து மோகன் அளித்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெண்மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.