திருச்சி அருகே படைக்கலன் தொழிற்சாலையில் புதிய ரக துப்பாக்கி அறிமுகம்

திருச்சி அருகே படைக்கலன் தொழிற்சாலையில் புதிய ரக துப்பாக்கி அறிமுகம் செய்யப்பட்டது.

Update: 2021-07-30 00:30 GMT

திருவெறும்பூர்,

திருச்சி அருகே படைக்கலன் தொழிற்சாலையில் புதிய ரக துப்பாக்கி அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ரக துப்பாக்கி அறிமுகம்

திருவெறும்பூர் அருகே உள்ள படைக்கலன் தொழிற்சாலையான துப்பாக்கி தொழிற்சாலையில் நேற்று TRICA என்ற புதிய சிறிய ரக துப்பாக்கியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொது மேலாளர் சஞ்சய் திவேதி கலந்து கொண்டு இந்த புதிய துப்பாக்கியை அறிமுகப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- இந்த புதிய ரக துப்பாக்கி 7.6 X 39 மில்லி மீட்டர் அளவு கொண்டதாகவும், காவல்துறை, விமான நிலையங்கள் மற்றும்  பாதுகாப்பு படை வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.  இதை மற்ற துப்பாக்கிகளுடன் ஒப்பிடும் போது சக்திவாய்ந்த தனிப்பட்ட தானியங்கி ஆயுதமாக இது செயல்படும்.

மறைத்து பயன்படுத்தலாம்

துப்பாக்கி சூட்டின் போது வெளிச்சம் மற்றும் சத்தத்தை குறைத்து நீண்ட தூரம் உள்ள இலக்கை நோக்கி தாக்கும் திறன் கொண்டது. இந்த ரக துப்பாக்கியை பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது பாதுகாப்பு கவசஉடைகளில் மறைத்து வைத்து பயன்படுத்தும் அளவிற்கு சிறியதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கூடுதல் பொது மேலாளர்கள் ராஜீவ் ஜெயின், ஏ.கே.சிங், கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்