யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பதை முதல்-மந்திரியே முடிவு செய்வார் - எடியூரப்பா

ஆட்சி நிர்வாகத்தில் நான் தலையிட மாட்டேன். யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பதை முதல்-மந்திரியே முடிவு செய்வார் என எடியூரப்பா கூறினார்.

Update: 2021-07-30 00:11 GMT
பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகளில் இருந்து வந்த எம்.எல்.ஏ.க்கள் தான் காரணம். அதனால் மீண்டும் அவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆட்சி நிர்வாகத்தில் நான் தலையிட மாட்டேன். யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பதை முதல்-மந்திரியே முடிவு செய்வார். அந்த சுதந்திரம் அவருக்கு உள்ளது. என்னிடம் சிலர் மந்திரி பதவி கேட்டு வருகிறார்கள். நான் அவர்களிடம் முதல்-மந்திரியை போய் பாருங்கள் என்று கூறி அனுப்புகிறேன். மந்திரிசபையில் சேர மாட்டேன் என்று ஜெகதீஷ்ஷெட்டர் என்னிடம் கூறினார். இந்த விஷயத்தில் நான் எதையும் கூறுவதற்கு இல்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

எடியூரப்பா, மந்திரி பதவி கேட்டு தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்றும், தன்னை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பதால், தனது வீடு இன்னொரு அதிகார மையமாக செயல்படுவதாக தவறாக சித்தரிக்கப்படும் என்றும் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்