பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்தை மாற்ற முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு

பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்தை மாற்ற முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2021-07-29 20:43 GMT
பெங்களூரு:

கமல்பந்த்

  பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருபவர் கமல்பந்த். இவர் கடந்த ஆண்டு (2020) ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவர் பதவி ஏற்று வருகிற 2-ந் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

  பொதுவாக பெங்களூரு போலீஸ் கமிஷனரின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும். இதனால் எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போதே புதிய கமிஷனரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்து உள்ளதால், பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ளார்.

கமிஷனரை மாற்ற முடிவு

  எடியூரப்பா மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக பணியாற்றிய பசவராஜ் பொம்மை, போலீஸ் துறையில் சில சீர்திருத்தங்களை செய்ய முடிவு செய்து உள்ளார். அதாவது பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், மைசூரு, கலபுரகி நகர போலீஸ் கமிஷனர்களையும் மாற்றிவிட்டு அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்க பசவராஜ் பொம்மை முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி
உள்ளது.

  பெங்களூரு நகர புதிய கமிஷனராக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. பிரதாப் ரெட்டி, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் தயானந்த், அம்ரித்பால் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தகவல்களும் வெளியாகி உள்ளது. ஆனால் இவர்கள் 3 பேருமே பசவராஜ் பொம்மைக்கு நெருக்கம் இல்லாதவர்கள். இதனால் இவர்களில் யார் வேண்டும் என்றாலும் புதிய கமிஷனராக நியமிக்கப்படலாம். இதுபோல மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகள், கூடுதல் தலைமை செயலாளர்களையும் மாற்ற பசவராஜ் பொம்மை முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்