தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-29 19:50 GMT
அரியலூர்
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள பெரியதத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 31). இவருக்கும், மீன்சுருட்டி அருகே உள்ள வீரபோகம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணுசாமி மகன் முத்துவுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி, வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றாராம். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரை உறவினர்கள் தேடி வந்தநிலையில், அந்த பகுதியில் உள்ள சுடுகாடு அருகே ஒரு மரத்தில் ராஜேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜேஸ்வரியின் தாய் குப்பம்மாள் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்