கறம்பக்குடி ஒன்றியத்தில் உற்சாகமாக தேர்வு எழுதிய முதியவர்கள்

உற்சாகமாக முதியவர்கள் தேர்வு எழுதினர்.

Update: 2021-07-29 19:13 GMT
கறம்பக்குடி:
கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் கறம்பக்குடி ஒன்றியத்தில் 34 பள்ளிகளில் கற்பித்தல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் எழுத, படிக்க தெரியாத 500-க்கும் மேற்பட்ட முதியவர்கள் தன்னார்வலர்கள் மூலம் எழுத்தறிவு பெற்று வருகின்றனர். இந்த கற்பித்தல் மையங்களில் படித்து வரும் வயது வந்தோருக்கான மதிப்பீடு முகாம் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் குழுவிருக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் கற்பித்தல் மையங்களில் படித்து வரும் சுமார் 200 முதியவர்கள் கலந்துகொண்டு ஆர்வமாக தேர்வு எழுதினார்கள். தீத்தானிப்பட்டி, மீனம்பட்டி, முருங்க கொல்லை, மேட்டுபட்டி ஆகிய மையங்களில் நடைபெற்ற தேர்வை வட்டார கல்வி அதிகாரி அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தீத்தானிப்பட்டி ஊராட்சி பகுதியில் சிறப்பிடம் பெறும் முதியவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கபட்டுள்ளது.

மேலும் செய்திகள்