வடகாடு பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரம்
வடகாடு பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
வடகாடு:
நிலக்கடலை சாகுபடி மும்முரம்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது இப்பகுதிகளில் ஒருசில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் இந்த மழையை பயன்படுத்தி நிலக்கடலை செடிகளுக்கு களையெடுத்தல், மண் அனைத்தல் போன்ற பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இப்பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, மா, பலா, தென்னை மற்றும் பூக்கள் உற்பத்தி மற்றும் காய்கறி பயிர்கள் என அனைத்து விளைச்சல் இருந்தும் விவசாயிகளை மேம்படுத்தும் விதமாக எந்தவொரு தொழிற்சாலை வசதியும் செய்து தரப்படவில்லை என்பது இப்பகுதி விவசாயிகளின் பெரும் கவலையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
கோரிக்கை
தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் உள்ளனர். இனிமேலாவது இப்பகுதியில் விளைந்த விவசாய விளைச்சல் பொருட்கள் வீணாகாமல் இருக்கும் பொருட்டு விவசாயிகளது கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றி தரவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.