மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ரெட்டையூரணி கிராமத்தைச் சேர்ந்த பத்திரப்பன் மகன் அருணாச்சலம் (வயது 21). இவர் மோட்டார் சைக்கிளில் உச்சிப்புளி அருகே உள்ள அலைகாத்தவலசை என்ற கிராமத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்த போது ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏறிய போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து உச்சிப்புளி போலீசார் அரசு பஸ் டிைரவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.