வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூர்
திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சூர்யா நகரில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய கருவம்பாளையத்தை சேர்ந்த ஜெயராம் வயது 20 என்பவரை மத்திய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயராம், பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார். அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள ஜெயராமிடம், ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் இதுவரை 35 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.