பாட்டியை கொலை செய்த வாலிபர் கைது

வேதாரண்யம் அருகே பாட்டியை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-29 16:21 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே பாட்டியை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அடித்துக்கொலை
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நாகக்குடையான் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி காந்திமதி (வயது65).இவர்களுடைய மகள் வழி பேரன் ரஞ்சித் (24). இவர் நேற்று முன்தினம் இரவு தனது  தாத்தா செல்வராஜிடம் சொத்து கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித், செல்வராஜை தாக்கி உள்ளார். அப்போது தடுக்க வந்த காந்திமதியின் முகத்தில் அடிபட்டது. இதில் மயங்கி விழுந்த காந்திமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
வாலிபர் கைது
இதுகுறித்து கரியப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் நாகக்குடையான் பகுதியில் மறைந்திருந்த ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்