மணல்மேடு அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; 2 பேருக்கு வலைவீச்சு

மணல்மேடு அருகே தொழிலாளியை அரிவாள் வெட்டியதாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-07-29 14:20 GMT
மணல்மேடு,

மணல்மேடு அருகே வையாபுரிதிடல் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). கூலி தொழிலாளியான இவருக்கும், அதே தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமிக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த பழனிசாமியை மடக்கி ஆரோக்கியசாமியின் மகன்கள் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. 

இதில் காயம் அடைந்த பழனிசாமி சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன், தம்பி 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்