பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்
திண்டுக்கல்லில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்களை மேம்படுத்த வேண்டும். 5ஜி சேவையை தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து ஊழியர்களுக்கும் மாதந்தோறும் இறுதிநாளில் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
அதன்படி திண்டுக்கல் பி.எஸ்.என்.எல்.தலைமை அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல்.அதிகாரிகள், ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் தலைமையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றதால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.