வீட்டில் பதுக்கி மது விற்றவர் கைது
வீட்டில் பதுக்கி மது விற்றவர் கைது செய்யப்பட்டார்
தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் வக்காரமாரி மற்றும் ஆயிப்பாளையம் பகுதிகளில் சிலர் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பதாக தா.பழூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது வக்காரமாரி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் வேல்முருகன் (வயது 32), ஆயிபாளையம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மனைவி அஞ்சம்மாள் ஆகியோர் தங்களது வீடுகளில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பேரில் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய அஞ்சம்மாளை வலைவீசி தேடி வருகின்றனர்.