மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Update: 2021-07-28 20:50 GMT
மேட்டூர்
கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக கடந்த 24-ந் தேதியில் இருந்து நீர்வரத்து தினமும் அதிகரித்தவாறு இருந்தது. தற்போது கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 27-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 34 ஆயிரத்து 141 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நீர்வரத்தானது நேற்று காலை வினாடிக்கு 29 ஆயிரத்து 666 கனஅடியாக குறைந்துள்ளது. அதேபோன்று நீர்வரத்தை விட திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 77.43 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 79.16 அடியாக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்