கொளத்தூர் அருகே காட்டு யானை சாவு

கொளத்தூர் அருகே காட்டு யானை செத்து கிடந்தது.;

Update: 2021-07-28 20:31 GMT
மேட்டூர்
கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னதண்டா, கத்திரிபட்டி, நீதிபுரம் உள்பட பல கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. இந்த நிலையில் கொளத்தூர் அருகே கத்திரிபட்டி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஒரு ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது. இது குறித்து மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சேலம் மாவட்ட வன அதிகாரி தலைமையில் மேட்டூர் வனத்துறை அலுவலர்கள் மற்றும் கால்நடை டாக்டர்கள் யானை இறந்து கிடந்த வனப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அதன் உடலை பரிசோதனை செய்த பிறகு, அங்கேயே புதைத்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், உடலில் ஜீரண கோளாறு ஏற்பட்டதால் இந்த யானை இறந்துள்ளதாக தெரிகிறது. ஆண் யானை என்பதால் அதன் தந்தங்களை கைப்பற்றி உள்ளோம் என்றனர்.

மேலும் செய்திகள்