அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 156 இடங்களில் அ.தி.மு.க.வினர் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
ஆர்ப்பாட்டம்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 156 இடங்களில் நேற்று உரிமை குரல் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கன்னிவாடியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.
துணை செயலாளர் முருகன் முன்னிலை வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, மின் கட்டணம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும், தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ரெட்டியார்சத்திரம்
ரெட்டியார்சத்திரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் பசும்பொன் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பொன்னுச்சாமி, செல்வா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தருமத்துப்பட்டியில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் ஆர்.கே. சுப்பிரமணி தலைமை தாங்கினார். தருமத்துப்பட்டி ஊராட்சி தலைவர் மருதமுத்து, கூட்டுறவு வங்கி தலைவர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சண்முகம், செல்வம், பாண்டி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல்
கொடைக்கானல் நகர அ.தி.மு.க. சார்பில் நகர் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மூஞ்சிக்கல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் நகர சபை தலைவருமான ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதேபோல் மேல்மலை ஒன்றியம் பள்ளங்கி கிராமத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் பொன்னுத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குஜிலியம்பாறை, நிலக்கோட்டை
குஜிலியம்பாறையில் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர் வீடு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னாள் எம்.பி. உதயகுமார், நகர செயலாளர் சேகர், நிலக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார், நகர பொருளாளர் பூக்கடை சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்கதுரை, அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்டிவீரன்பட்டி
பட்டிவீரன்பட்டி பகுதியில் அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்.வாடிப்பட்டியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க. நிர்வாகி அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேவுகம்பட்டியில் நகர செயலாளர் மாசாணம் வீடு முன்பு வத்தலக்குண்டு மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அய்யம்பாளையத்தில் நகர செயலாளர் நாகசுப்பிரமணியன் வீடு முன்பு ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சின்னச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சின்னாளப்பட்டி
ஆலமரத்துப்பட்டியில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மயில்சாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் விஜயபாலமுருகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பஞ்சம்பட்டியில் ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா தெய்வீக ராணி தலைமையிலும், சேடப்பட்டியில் மாவட்ட மாணவரணி செயலாளர் கோபி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிள்ளையார்நத்தம், வெள்ளோடு, காந்திகிராமம், கலிக்கம்பட்டி, சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வத்தலக்குண்டு, கொடைரோடு
வத்தலக்குண்டுவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் பீர்முகமது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அ.தி. மு.க. நிர்வாகிகள் கனிபாய், குமரேசன், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொடைரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு அம்மையநாயக்கனூர் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் சேகரன், கணேசன், ஆசீர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் கிழக்கு ஒன்றியம்
சக்கையநாயக்கனூரில் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் தவமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளப்பட்டியில் கூட்டுறவு சங்க தலைவர் சங்கையா தலைமையிலும், குல்லலக்குண்டு ஊராட்சியில் குணசேகரன் தலைமையிலும், வேடசந்தூரில் அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைைமயிலும், நகர செயலாளர் பாபுசேட் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் ஸ்கீம் ரோட்டில் திண்டுக்கல் மாநகர், கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் திருமாறன், அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் ராமமூர்த்தி, நகர மாணவரணி செயலாளர் சின்னு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பழனி
பழனியில் நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.ஜி.ஆர். அணி இணை செயலாளர் குமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபாலு, சுப்புரத்தினம் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்.எப்.சாலை பகுதியில் ரவிமனோகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பட்டத்து விநாயகர் கோவில் பகுதியில் பொதுக்குழு உறுப்பினர் ராஜாமுகமது தலைமையிலும், ஆயக்குடியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.டி.சி. மாரியப்பன் தலைமையிலும், நெய்க்காரப்பட்டியில் பேரூர் செயலாளர் விஜயசேகரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒட்டன்சத்திரத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட மீனவர் அணி செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.