வாகனம் மோதி வாலிபர் சாவு

நெல்லை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2021-07-28 19:42 GMT
நெல்லை:

நெல்லை தாழையூத்து அருகே உள்ள கட்டளையை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 23). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் ராஜவல்லிபுரம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பேச்சிமுத்து மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பேச்சிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்