குணடர் சட்டத்தில் ரவுடி கைது
பரப்பாடி அருகே குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டார்.;
இட்டமொழி:
பரப்பாடி அருகே உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் முருகேசன் என்ற வெடிகுண்டு முருகேசன் (வயது 40). ரவுடிகள் பட்டியலில் உள்ள இவர் மீது வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் கக்கன் நகரில் ஒருவரிடம் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில், முருகேசன் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர் கைது செய்யப்பட்டார்.