வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் அத்தி கோவில் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சர்க்கரை நோய், கண் சிகிச்சை, இதய நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் வத்திராயிருப்பு வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன் மற்றும் ராம்கோ நிறுவனத்தின் மருத்துவர் விஜய ஆனந்த் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.