சோழவந்தான், ஜூலை
சோழவந்தான் அருகே நாச்சிக்குளம் ரோட்டில் பழைய கருப்பட்டி ெரயில்வே நிலையம் முன்பு உள்ள மருதன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் நிலைய அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடிசை எரிந்து நாசமானதுடன் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது. மேலும் மருதன் மகளுடைய கல்லூரி சான்றிதழும் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. இது குறித்து சோழவந்தான் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.