எஸ்.புதூர்
மேலூர் அருகே உள்ள பெரிய கற்பூரம்பட்டியைச் சேர்ந்த சிலர் சரக்கு ஆட்டோவில் எஸ்.புதூர் அருகே கே.புதுப்பட்டியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வந்த போது, மாயாண்டிபட்டி அருகே அந்த வழியாக வந்த தனியார் மில் பஸ் மோதியது. இதில் சரக்கு ஆட்டோவில் வந்த பெரிய கற்பூரம்பட்டியை சேர்ந்த நல்லமணி, சின்னன், பிரியதர்ஷினி, நதியா, கவிதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் வெள்ளைச்சாமி தப்பியோடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் புழுதிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.