சிவகங்கையில் குப்பை தொட்டியில் கிடந்த ஆவணங்கள்
சிவகங்கையில் குப்பை தொட்டியில் கிடந்த ஆவணங்கள்
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மைதானத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தில் சில ஆவணங்கள் கிடந்தன. இவை கலெக்டர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தவை என கூறப்படுகிறது. தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடர்பான ஆவணங்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்பது தொடர்பான கடிதங்கள் அங்கு கிடந்தன. கலெக்டரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய கடிதங்கள் குப்பையில் கிடந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக கலெக்டர் மதசூதன் ரெட்டி கூறியதாவது:-
வழக்கமாக அலுவலகங்களில் கோப்புக்கள் தயாரிக்கும் போது அதில் திருத்தம் இருந்தால் அல்லது தவறு இருந்தால் அவற்றை கிழித்து விட்டு புதியதாக ஆவணங்கள் தயார் செய்யப்படும். வேண்டாதவற்றை கிழித்து குப்பை தொட்டியில் போடுவார்கள். அதுபோல் தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடர்பான ஆவணங்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்பது தொடர்பான கடிதங்களிலும் தவறுகள் இருந்ததால் அதற்கு பதிலாக வேறு கடிதங்கள் புதிதாக தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது. இந்த ஆவணங்களை கிழித்து குப்பை தொட்டியில் போட்டு இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அப்படியே போட்டுள்ளார்கள். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.