தீப்பிடித்து கார் எரிந்தது

தீப்பிடித்து கார் எரிந்தது

Update: 2021-07-28 18:14 GMT
சிவகங்கை
சிவகங்கை செந்தமிழ்நகர் சிபியன் லே அவுட் விநாயகர் தெருவை சேர்ந்தவர் கொங்கேஸ்வரன். இவர் சிவகங்கை காந்தி வீதியில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். இவரது மனைவி சேதுலட்சுமி. இவருக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். இந்நிலையில் காரின் முன் பகுதியில் தீப்பிடித்தது தகவல் அறிந்ததும் சிவகங்கை தீயணைக்கும் நிலைய அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும்படையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் காரின் எஞ்சின் பகுதி முழுமையும் சேதம் அடைந்தது. அது தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்