அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Update: 2021-07-28 17:37 GMT
அரக்கோணம்

அரக்கோணம் அசோக் நகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக சாலை வசதி, குடி நீர் வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்றும், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களிடம் நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நகராட்சி ஆணையாளர் ஆசீர்வாதத்தை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.  அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்