கிணத்துக்கடவில் 139 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம்

கிணத்துக்கடவில் 139 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வினியோகம்

Update: 2021-07-28 17:30 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கிணத்துக்கடவு, கோவில்பாளையம், வடசித்தூர் ஆகிய வருவாய் கிராம பகுதிகளில் மொத்தம் 70 ரேஷன்கடை கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 32 ஆயிரத்து 762 ரேஷன் கார்டுகள் உள்ளன. 

இந்த நிலையில் புதிய ரேஷன்கார்டுகள் கேட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 800 பேர் விண்ணப்பம் கொடுத்தனர். 

இதில் 584 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் தயார் நிலையில் உள்ளது. முதல் கட்டமாக கிணத்துக்கடவு குடிமைபொருள் வழங்கல் அலுவலகத்திற்கு 139 புதிய ரேஷன்கார்டுகள் வந்தன. 

அந்த 139 பேருக்கு வட்ட வழங்கல் அதிகாரி முத்து ரேஷன் கார்டுகளை வழங்கினார். மீதமுள்ளோருக்கு கார்டுகள் வந்ததும், உடனடியாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்