மின்சாரம் தாக்கி பசுமாடு சாவு காப்பாற்ற முயன்ற விவசாயியும் பலி

ஆரணி அருகே மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற பசுமாடு மின்சாரம் தாக்கி பலியானது. அதை, காப்பாற்ற முயன்ற விவசாயியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-07-28 17:06 GMT
ஆரணி

ஆரணி அருகே மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற பசுமாடு மின்சாரம் தாக்கி பலியானது. அதை, காப்பாற்ற முயன்ற விவசாயியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கியது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மலையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 75), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை நேற்று காலை அங்குள்ள தரிசு நிலத்துக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றார். அப்போது அங்குள்ள ஏரிக்கரை அருகே உள்ள ஒருவரின் நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசுமாடு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அலறல் சத்தத்துடன் கீழே சாய்ந்து பலியானது.
அதைப் பார்த்த பெருமாள் ஓடி வந்து பசுமாட்டை காப்பாற்றும் முயற்சியாக அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை தூக்கிப் போட்டுள்ளார். அப்போது, அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து களம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து இறந்த விவசாயி பெருமாளின் உடலை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்