இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்

திருப்பூர் மாவட்டத்தில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-07-28 16:55 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
மேற்கு மண்டல காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் 66 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும், வெளிமாவட்டத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கும் என மொத்தம் 21 இன்ஸ்பெக்டர்களும் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த அனந்தநாயகி கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கும், திருப்பூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த முரளி அவினாசி சட்டம், ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராவும், தாராபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக விநாயகம் பல்லடம் சட்டம், ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், ஊத்துக்குளி இன்ஸ்பெக்டராக பாலசுந்தரம் மங்கலம் சட்டம், ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுபோல் காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜேஷ்கண்ணன் உடுமலை சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், காங்கேயம் இன்ஸ்பெக்டராக இருந்த மணிகண்டன் தாராபுரம் இன்ஸ்பெக்டராகவும், தாராபுரம் இன்ஸ்பெக்டராக இருந்த மகேந்திரன் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டராகவும், கோவை சரக இன்ஸ்பெக்டராக இருந்த செல்வன் மூலனூர் இன்ஸ்பெக்டராகவும், திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த கலையரசி கோவை மாவட்ட எஸ்.சி.எஸ். பிரிவு இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
காங்கேயம் இன்ஸ்பெக்டர்
மேலும் கோவை சரக இன்ஸ்பெக்டராக இருந்த கோவர்த்தனாம்பிகை தாராபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கோவை பேரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த அனுராதா திருப்பூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தாராபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த நர்மதாதேவி ஈரோடு கோபி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த தனலட்சுமி திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயக்குமார் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அம்பிகா குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுஜாதா உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கோவை சரக இன்ஸ்பெக்டராக இருந்த பாலமுருகன் மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை சரகத்தில் இருந்த ரவி காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கோவை சரகத்தில் இருந்த செல்லம் தாராபுரம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த நீலாதேவி பல்லடம் குற்றப்பிரிவுக்கும், பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த செந்தில்குமார் ஊட்டி டவுன் மத்திய போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்