இசைகருவிகளை வாசித்து வழிபாடு

இசைகருவிகளை வாசித்து வழிபாடு

Update: 2021-07-28 16:33 GMT
பல்லடம்
 பல்லடம் வடுகபாளையத்தில் உள்ள முனியப்பன் கோவிலில் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, மாவட்ட நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில்  40க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைக்கருவிகளை வாசித்து முனியப்ப சுவாமியை வழிபட்டனர். பின்னர் சங்கத்தின் தலைவர் ஆண்டவன் நிருபர்களிடம் கூறியதாவது
 தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.  கடந்த 2 ஆண்டுகளாக  கொரோனா தொற்று பாதிப்பால் இசைக் கலைஞர்களுக்கு முற்றிலும் வேலை வாய்ப்பு இல்லை. எனவே தமிழக அரசு கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும். இசைக்கருவிகள் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இசைக் கலைஞர்கள்  500 பேருக்கு இசைக்கருவிகளை வழங்க வேண்டும். சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் இசைக்கலைஞர்களுக்கு இலவச வீட்டு மனை வேண்டும். தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பாஸ் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த அடுத்த மாதம் சென்னை செல்ல உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
---
Image1 File Name : 5340421.jpg
---
Image2 File Name : 5340422.jpg
----
Reporter : P. Arjunan  Location : Tirupur - Palladam

மேலும் செய்திகள்