தார் சாலை அமைக்கக்கோரி நெல் குத்தும் போராட்டம்

தூத்துக்குடியில் தார் சாலை அமைக்கக்கோரி நெல் குத்தும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2021-07-28 12:13 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் தார்சாலை அமைக்க கோரி நெல்குத்தும் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம்

தூத்துக்குடி தபால் தந்தி காலனி மேற்கு பகுதியில் உள்ள 5 தெருக்களில் பல ஆண்டுகளாக தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அங்கு தார்சாலை அமைக்க வேண்டும், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் நெல் குத்தும் போராட்டம் தபால் தந்தி காலனி 12-வது தெருவில் நடத்தப்பட்டது.
போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். மாதர் சங்கம் கமலம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முத்து கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ரோட்டில் உள்ள குழியான பகுதியில் நெல் குத்தும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது. கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கலந்து கொண்டவர்கள்

போராட்டத்தில் விக்னேஷ், கிஷோர், மணி, தாம்சன், இசக்கி, கற்பககனி, காந்திமதி, வினோகலன், பிரேமா, சித்திரைபுஷ்பம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்