குற்றங்களை தடுப்பது போலீசாரின் முக்கிய கடமை

குற்றங்களை தடுப்பது போலீசாரின் முக்கிய கடமை என்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சூப்பிரண்டு அறிவுரை கூறினார்.

Update: 2021-07-27 19:04 GMT
திருவாரூர்;
குற்றங்களை தடுப்பது போலீசாரின் முக்கிய கடமை என்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு சூப்பிரண்டு அறிவுரை கூறினார். 
சப்-இன்ஸ்பெக்டர் பணி
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் 8 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குற்றங்களில்  புலன் விசாரணை செய்து தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தருவது போலீசாரின் முக்கிய பணியாகும். அதைவிட குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது மிக முக்கியம் ஆகும். 
தீர்வு
குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டு புகார் கொடுக்க வருபவர்களிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்வதுடன், புகார்களுக்கு உடனுக்கு  தீர்வு காணும் வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 நிகழ்ச்சியில் சீருடை பணியார் தேர்வு வாரியம்  மூலம் சப்-இன்ஸ்பெக்டர்களாக நேரடியாக தேர்வு செய்யப்பட்ட 5 ஆண்கள், 3 பெண்களுக்கு பணி நியமன ஆணையை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் வழங்கினார். 

மேலும் செய்திகள்