அவினாசி
அவினாசி போலீசார் நேற்று மாலை தெக்கலூர் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தெக்கலூர் செங்காலி பாளையம் காட்டுப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தததில் அவர் செங்காலி பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி வயது 53 என்பதும் பாட்டில்களில் சாராயம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையத்து ரங்கசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லேபிள் ஏதும் இல்லாத 12 மதுபான பாட்டில்களையும் பணம் ரூ. 400-ஐயும் போலீசார் பறிமுதல் செய்த