ஜோலார்பேட்டை பகுதியில் 17 ஊராட்சி செயலாளர்கள் பணி மாற்றம்
ஜோலார்பேட்டை பகுதியில் 17 ஊராட்சி செயலாளர்களை பணி மாறறம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
ஜோலார்பேட்டை
17 ஊராட்சி செயலாளர்கள் பணி மாற்றம்
ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலாளர்கள் ஒரே ஊராட்சியில் பல வருடங்களாக பணியாற்றி வருவதாகவும், பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டு வருவதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் (கிராம ஊராட்சி) சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி அக்ராகரம், சின்ன வேப்பம்பட்டு, சின்னகல்லு பள்ளி, சின்ன கம்மியம்பட்டு, சின்னமூக்கனூர், தாமலேரி முத்தூர், ஏலகிரி கிராமம், கோணாப்பட்டு, கேத்தாண்டப்பட்டி, கூத்தாண்டகுப்பம், மூக்கனூர், பெரிய கம்மியம்பட்டு, புத்தகரம், ரெட்டியூர், கலந்திரா, செட்டியப்பனூர் ஆகிய ஊராட்சிகளில் பணிபுரிந்து வந்த ஊராட்சி செயலாளர்கள் ஒன்றியத்திற்குட்பட்ட வேறு ஊராட்சிகளில் பணியாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இடமாற்றம்...
இதில் மேகநாதன் என்பவர் பணியாண்ட பள்ளி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக கூடுதல் பொறுப்பில் இருந்தார். அவர் விடுவிக்கப்பட்டு கூத்தாண்ட குப்பம் ஊராட்சிக்கு கணபதி என்பவர் கூடுதல் பொறுப்பு வகிக்க கூறப்பட்டுள்ளது.
மேலும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ள ஊராட்சி செயலாளர்கள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஊராட்சிக்கு பணி பொறுப்பினை மேற்கொள்ள ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.