குன்னூர் அருகே மாரியம்மன் கோவிலுக்குள் புகுந்த கரடி

குன்னூர் அருகே மாரியம்மன் கோவிலுக்குள் கரடி புகுந்தது.

Update: 2021-07-27 16:40 GMT
ஊட்டி,

குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் குன்னூர் அருகே பழைய அருவங்காடு நேருநகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை கரடி புகுந்தது. 

அங்கு கதவை உடைத்து உள்ளே சென்று, பூஜைக்கு வைக்கப்பட்ட பொருட்களை சேதப்படுத்தியதுடன், எண்ணெய்யை குடித்துவிட்டு சென்றது. இதற்கிடையே கரடி வந்து சென்றதை ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். 

இந்த காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. கரடி நடமாட்டம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்