வேலூர் மாவட்டத்தில் 26 பேருக்கு தொற்று பாதிப்பு
26 பேருக்கு தொற்று பாதிப்பு
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் வேகம் குறைந்தபோதிலும் கொரோனா பரிசோதனை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் வீடு, வீடாக மருத்துவ குழுவினர் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிலர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக கூறி பரிசோதனை செய்து கொள்ள மறுக்கிறார்கள். ஓல்டு டவுன் பகுதியில் முககவசம் அணியாமல் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை முடிவுகள் தினமும் வெளியிடப்படுகிறது. அதன்படி நேற்று வெளியான முடிவில் ஒரேநாளில் 26 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
தொற்று பாதித்தவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி மூச்சுத்திணறலால் இறந்து வருகின்றனர். நேற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தாக சுகாதாரத்தறை அதிகாரிகள் தெரிவித்தனர்.