லாலாபேட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

லாலாபேட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது.;

Update: 2021-07-26 19:06 GMT
லாலாபேட்டை
லாலாபேட்டை அருகே உள்ள கண்ணமுத்தம்பட்டியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆடு, மாடுகள், வைக்கோல் போர், விறகுகள் அடுக்கி  வைத்து பயன்படுத்தி கொண்டிருந்தார். இதனை அகற்ற வேண்டி அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கரூரில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு  அளித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டதன்பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது, அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஒரு வாரத்திற்குள் அந்த இடத்தை ராஜமாணிக்கம் அகற்ற வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் அகற்றாத காரணத்தால் நேற்று காலை கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகுடேஸ்வரன் தலைமையில் அதிகாரிகள் வந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அரசுக்கு சொந்தமான இடத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்தனர். அப்போது மண்டல துணை வட்டாட்சியர் மதிவாணன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் கிராமநிர்வாக அதிகாரிகள் உடனிருந்தனர்

மேலும் செய்திகள்