சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு

சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு உறுதிசெய்யப்பட்டது.;

Update: 2021-07-26 18:39 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா அச்சம் குறைந்து வந்துள்ள நிலையில் மக்களிடையே தற்போது டெங்கு அச்சம் அதிகரித்துள்ளது.   பாம்பன் பகுதியில் 7 வயது சிறுமி மற்றும் 11 வயது சிறுவன், திருப்பாலைக்குடி காந்திநகரை சேர்ந்த 7 மாத சிறுவனுக்கும், ராமநாதபுரம் கொல்லம்பட்டறை தெருவை சேர்ந்த 6 வயது சிறுவன் என அடுத்தடுத்து 10-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பிரான்சிஸ் நகரை சேர்ந்த 7 வயது சிறுமிக்கும், ஆர்.எஸ்.மங்கலம் ஏ.மணக்குடியை சேர்ந்த 32 வயது நபருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்