கோவை மாவட்டத்தில் புதிதாக 169 பேருக்கு கொரோனா

கோவை மாவட்டத்தில் புதிதாக 169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

Update: 2021-07-25 21:27 GMT
கோவை

கோவை மாவட்டத்தில் புதிதாக 169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 92 வயது முதியவர் உள்பட 4 பேர் பலியானார்கள்.

கொரோனா

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 169 ஆக உயர்ந்தது.

மேலும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 254 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.

4 பேர் பலி

இதுதவிர கோவையை சேர்ந்த 38, 50 வயதுடைய ஆண்கள், 76 மற்றும் 92 வயது முதியவர்கள் என மொத்தம் 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பலியானார்கள். 

இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால் 2,158 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,133 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலகிரியில் 54 பேர் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 54 பேருக்கு கொரோனா  உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 246 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 81 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 29 ஆயிரத்து 351 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 718 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமுள்ள 351 ஆக்சிஜன் படுக்கைகளில் 62 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 289 படுக்கைகள் காலியாக இருக்கிறது.

மேலும் செய்திகள்