அந்தியூரில் ஸ்கூட்டருக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
அந்தியூரில் ஸ்கூட்டருக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள பாம்பு- தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்;
அந்தியூர்
அந்தியூர் தவுட்டுபாளையம் பழனியப்பா வீதியை சேர்ந்தவர் திருநீலகண்டன் (வயது 45). இவர் தனது வீட்டு முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி இருந்தார். அப்போது பாம்பு ஒன்று வேகமாக வந்து ஸ்கூட்டருக்குள் சென்று புகுந்து கொண்டது. இதனை பார்த்த திருநீலகண்டன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜூக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பை லாவகமாக உயிருடன் மீட்டனர். பிடிபட்டது 5 அடி நீளமுள்ள வில்லரனை பாம்பு என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் அந்தியூர் வனத்துறை ரேஞ்சர் உத்தர சாமியிடம் தீயணைப்பு வீரர்கள் பாம்பை ஒப்படைத்தனர். வனத்துைறயினர் பாம்பை அந்தியூர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.