100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன

Update: 2021-07-25 20:16 GMT
புதுக்கோட்டை
 புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். இதையடுத்து அந்த கடையில் சோதனை நடத்தி 100 கிலோ அளவில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வியாபாரி விஜயராகவன் (வயது 52) கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்