போலி ஆவணம் மூலம் மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு
போலி ஆவணம் மூலம் மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அடப்பன் வயலை சேர்ந்தவர் ஜாகீர் உசேன். தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர். இவரது லாரி விபத்துக்குள்ளான நிலையில் காப்பீடு ஆவணங்களை போலியாக தயாரித்து நிதி நிறுவனத்தில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக காப்பீடு நிறுவனம் தரப்பில் திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஜாகீர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல குடுமியான்மலையை சேர்ந்த லாரி உரிமையாளரான மாரிமுத்து என்பவர் தனது லாரி விபத்துக்குள்ளான போது காப்பீடு தொடர்பாக போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்துள்ளார். இதுதொடர்பாகவும் காப்பீடு நிறுவனம் அளித்த புகாரின்பேரில் மாரிமுத்து மீது திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.