கஞ்சா விற்ற 2 பேர் கைது
சிவகாசியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சிவகாசி,
சிவகாசி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் சித்துராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெருமாள்சாமி (வயது 85), ராம்குமார் (29) ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.