மாவட்டத்தில் 105 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-25 19:20 GMT
சேலம், ஜூலை.26-
சேலம் மாவட்டத்தில் புதிதாக 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 107 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மாவட்டம் முழுவதும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. அதன்படி சேலம் மாநகராட்சி பகுதியில் 23 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. எடப்பாடி, கொங்கணாபுரத்தில் தலா 2 பேர், சங்ககிரி, மேச்சேரி, சேலம் ஒன்றிய பகுதிகளில் தலா 3 பேர், வீரபாண்டியில் 4 பேர், தாரமங்கலத்தில் 5 பேர், மகுடஞ்சாவடியில் 6 பேர், ஓமலூரில் 8 பேர், கொளத்தூரில் 9 பேர் பாதிப்படைந்தனர்.
பாதிப்பு ஏற்பட்டது
அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டியில் தலா ஒருவர், கெங்கவல்லியில் 2 பேர், தலைவாசல், ஆத்தூரில் 3 பேர், வாழப்பாடியில் 7 பேர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 105 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 92 ஆயிரத்து 840 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் 89 ஆயிரத்து 797 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றனர். இதுவரை 1,537 பேர் தொற்று பாதித்து இறந்தனர். தற்போது மாவட்டத்தில் 1,506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்