விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

Update: 2021-07-25 19:01 GMT
பேரையூர், ஜூலை.26-
பேரையூர் அருகே உள்ள பி.முத்துலிங்காபுரத்தை சேர்ந்தவர் வீரன்(வயது 52). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் பேரையூருக்கு சென்று விட்டு திரும்பவும் முத்துலிங்காபுரம் வந்து கொண்டிருந்தார். பேரையூர்-வன்னிவேலம்பட்டி சாலையில் ஆவாரம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த  காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்