திருக்கோவிலூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலி

திருக்கோவிலூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலி

Update: 2021-07-25 17:04 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்(வயது 45). கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பி வந்தார். 

இந்த நிலையில் மகேஷ் நேற்று காலை வேட்டவலம் செல்லும் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மகேஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


மேலும் செய்திகள்