ஜோலார்பேட்டை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் 7½ பவுன் சங்கிலி பறிப்பு
ஜோலார்பேட்டை கியூ பிராஞ்ச் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் 7½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
ஜோலார்பேட்டை
போலீஸ் இன்ஸ்பெக்டர்
ஜோலார்பேட்டைைய அடுத்த சின்னகம்மியம்பட்டு வெள்ளைக்குட்டையான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத், சின்னகம்மியம்பட்டு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி புனிதா (வயது 47), திருப்பத்தூர் பகுதியில் கியூ பிராஞ்ச் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். புனிதா நேற்று முன்தினம் இரவு பணி முடிந்ததும் மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
ரெட்டியூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே இரவு 10.50 மணியளவில் வந்தபோது, அந்த வழியாக எதிரே மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை மிகைப்படுத்தி புனிதாவின் முகத்தை நோக்கி பாய்ச்சியதால் நிலைகுலைந்த அவர் மொபட்டை இயக்க முடியாமல் நிறுத்தினார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
அந்த நேரத்தில் அருகில் வந்த மர்மநபர்கள், புனிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலி மற்றும் மாங்கல்யம், கால்காசு, ஞானகுழாய், குண்டு ஆகிய அடங்கிய தங்க நகை 1½ பவுன் என மொத்தம் 7½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
. இதுகுறித்து புனிதா கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து நகைளை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.