சிலைகளை சேதப்படுத்தியதாக தனியார் மருத்துவமனை அதிகாரி உள்பட 6 பேர் கைது
தனியார் மருத்துவமனை அதிகாரி உள்பட 6 பேர் கைது
திருவலம்
வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த கரிகிரி அருகே தீர்த்தகிரி மலை உள்ளது. இந்தமலை அடிவாரத்தில் இருந்த அம்மன் சிலை, ராமர், லட்சுமணர் உள்ளிட்ட 7 சிலைகளை சிலர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து திருவலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் சிலையை சேதப்படுத்திய வழக்கில் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் கட்டிடப்பிரிவின் நிர்வாக இயக்குனர் பிரின்ஸ் சாலமன், மோகன்ராஜ், மோகன், விக்ரமாதித்தன், பிரகாஷ், கோவிந்தராஜ் ஆகிய 6 பேரை திருவலம் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.