பேரணாம்பட்டு தனிப்பிரிவு ஏட்டு பணியிடை நீக்கம்
தனிப்பிரிவு ஏட்டு பணியிடை நீக்கம்
வேலூர்
பேரணாம்பட்டு அருகே உள்ள கவுராப்பேட்டை வனப்பகுதியில் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் பிரமுகர்கள் பலர் பணம் வைத்து சூதாடி வந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை சேர்ந்த பைனான்சியரான ஞானசேகரன் என்பவர் சூதாட்டத்தில் கலந்து கொண்டு, தான் வென்ற ரூ.25 லட்சத்துடன் வீடு திரும்பியபோது மர்மகும்பல் அவரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சூதாட்டம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் தகவல் தெரிவிக்காமல் இருந்த தனிப்பிரிவு ஏட்டு செல்வராஜ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் தனிப்பிரிவு ஏட்டு செல்வராஜை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டரிடம், வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு விசாரணை நடத்தி வருகிறார்.