புதிய மின்மாற்றி அமைப்பு
தேரிருவேலியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி பகுதியில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப் பட்டது. முதுகுளத்தூர் ஒன்றியம் தேரிருவேலி ஊராட்சி பாண்டியன் கிராம வங்கி தெருவில் குறைந்த மின்னழுத்தம் அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மின்மாற்றி புதிதாக அந்தபகுதியில் அமைக்கப்பட்டது. அந்த மின்மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அண்மையில் கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மின் பகிர்வு வட்டம் மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் உதவி செயற்பொறியாளர் கங்காதரன் உதவி மின் பொறியாளர் கனகராஜ் தேரிருவேலி ஊராட்சி தலைவர் அபுபக்கர் சித்திக், துணைத்தலைவர் கலாதேவி சேதுராமன் ஒன்றிய கவுன்சிலர் கோதண்டம், ஊராட்சி செயலர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.